செவ்வாய், 10 மார்ச், 2009

கடல் மட்டம் இரண்டு மைல் தாழ்வாக இருந்திருக்கிறது

பொருள்: இரண்டு கோடி முன்பு ஆண்டுகளுக்கு கடல் மட்டம் பத்தாயிரம் அடி (இரண்டு மைல்) தாழ்வாக இருந்திருக்கிறது.புதிய ஆதாரம்.


தவளைகள் கடல் பயணம் செய்யுமா?

தவளை கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
காரணம் தவளையின் மெல்லிய தோல் வழியாக கடல் நீரில் உள்ள உப்பு தவளையின் உடலுக்குள் சென்று தவளை இறந்து விடும்.

ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு மைல் தொலைவில் அமைந்து இருக்கும் கரிபியன் தீவுகளில் இருக்கும் தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தவளைகளின் வம்சாவளி என்பது மரபணு சோதனை மூலம் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் தென் அமெரிக்காவிற்கும் கரிபியன் தீவிற்கும் இடையே ஏழாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதி இருக்கிறது. எனவே தவளைகள் எப்படி தென் அமெரிக்காவில் இருந்து பல நூறு மைல் தொலைவில் இருக்கும் கரிபியன் தீவிற்கு வந்தன என்பதற்கு பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிளேர் ஹெட்ஜஸ் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்

அதாவது தென் அமெரிக்காவில் இருந்து புயலில் திடீரென்று அடித்து வரப்பட்ட தாவரங்களால் ஆன அடர்த்தியான மெத்தை போன்ற அமைப்பில் தவளைகள் குடிப்பதற்கு தூய நீரும்,உண்ணுவதற்கு பூச்சிகளும் இருந்து அதில் பயணம் செய்த தவளைகள் கரிபியன் தீவிற்கு வந்து சேர்ந்தன என்று கூறுகிறார்.

ஆனால் உண்மையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பத்தாயிரம் அடி ( இரண்டு மைல் ) தாழ்வாக இருந்ததால் தென் அமெரிக்காவில் இருந்து தவளைகள் தரை வழியாகவே கரிபியன் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து வெளியிடப் படும் நீர் ஆழ் கடல் சுடு நீர் ஊற்று மூலம் கடலில் சேர்வதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையேயும் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் தீவுகளுக்கு இடையேயும் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது.

இது போன்ற நிலத் தொடர்பு வழியாகவே விலங்குகள் கண்டங்களில் இருந்து அருகில் இருக்கும் மேட்டு நிலப் பகுதிகளுக்கு சென்றிருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் மேட்டு நிலப் பகுதிகள் கடலால் சூழப் பட்டு தீவுகளாக உருவாகின
மற்றபடி தவளைகள் கடல் பயணம் செய்யது.

விஞ்ஞானி,க.பொன்முடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக