செவ்வாய், 10 மார்ச், 2009

கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளையும் கற்கருவிகளையும்,தீவுக் கண்டமான ஆஸ்திரேலியக் கண்டத்தில் இருந்து, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியக் கண்டமானது, ஆசியக் கண்டத்தில் இருந்து ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களும் நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கிறது.

எனவே கடல் பயணம் செய்யாமல் ஆஸ்திரேலியக் கண்டத்தை அடைய முடியாது.

எனவே கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்திருக்கிறார்கள் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் ,
ஆனால் கடல் பயணம் செய்யும் அளவுக்கு கற்கால மனிதர்கள் அறிவு வளர்ச்சி பெற்றிருக்க வில்லை, என்று மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்யவில்லை.

எனவே கடல் மட்டம்தான் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்ததால், ஆசிய மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு இடையே இருந்த நிலத் தொடர்பு வழியாகக் கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

அதன் பிறகு கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்திருக்கிறது.
நாலாயிரம் அடி கடல் மட்டம் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து வெளிவந்த நீரே காரணம்.


பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.

ஆனால் பூமிக்கு மேலே இருக்கும் பாறையில் அந்த அளவுக்கு நீர் இல்லை.

காரணம் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகி, பாறையாக உருவான பொழுது, அதில் இருந்து நீர் தனியே பிரிந்து விட்டது.

பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு மேல் சேர்ந்ததால், கடல் மட்டம் உயர்ந்தது.

கடல் மட்டம் உயர்ந்ததால், நிலப் பகுதிகள் கடலில் மூழ்கின.

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது, அதிலிருந்து நீரும்,எண்ணெயும் மற்ற வாயுக்களும் பிரிந்ததால்,அதிக அடர்த்தியுள்ள பாறைக் குழம்பில், குறைந்த அடர்த்தியுள்ள பாறைத் தட்டுகள் உருவானது.

அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால், நிலப் பகுதிகளும் ஆங்காங்கே உயர்ந்தன.

இவ்வாறு கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்த பொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்ட கடல் உயிரினங்களே இன்று புதை படிவங்களாக காணப் படுகின்றன.

இவ்வாறு நிலப் பகுதிகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஒரே வகையான விலங்கினங்கள் மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு என்ன காரணம்?

கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது, கண்டங்களுக்கு இடையே நிலத் தொடர்பு இருந்தது.அதன் வழியாகவே டைனோசர்கள் போன்ற ஆதி கால விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன.

ஆனால் ஒரே வகையான விலங்கினங்கள் மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு ,முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்தது என்றும் ,பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன.என்றும் கற்பனையாக ஒரு விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.

இதனால், ''நிலம் நகர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது'' என்று ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கருதுகின்றனர்.

ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்களால் '' சுற்றுப் புறப் பகுதியைத் தவிர்த்து, கண்டத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் கூற இயலவில்லை.

உண்மையில் நிலப் பகுதிகள் ஆங்காங்கே உயர்ந்து கொண்டிருப்பதால்தான், ஒரு இடத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பாக தீவுகள் உயரும் பொழுதே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக